“மிஸ்டர் பாரத்” படத்தில் ரஜினியுடன் மல்லுக்கட்டியிருந்தார் சத்யராஜ். ரஜினியின் மீது இருந்த பகைமையை காட்டும் விதமான நக்கல் கலந்த நடிப்பில் அசத்தியிருந்தார் இவர். படத்தின் பலமாக இவர்கள் இருவரின் மோதல் காட்சிகளே அமைந்தது. இருவரும் ஒரே சம காலகட்டத்தில் தான் கதாநாயகர்களாக நடித்து வந்தார்கள்.
கதாநாயகனாக நடித்து அசத்தி வந்த சத்யராஜ், திடீரென வில்லனாக மாறி, அதுவும் ரஜினியை எதிர்த்து நடித்து என ஆச்சரியமும் கொடுத்தார். இவரது கேரியர் ஆரம்பமே வில்லனகாத்தான். எப்படி திடீரென கதாநாயகனாக மாறினாரோ அதே போலத்தான் ரஜினிக்கு வில்லன் ஆனார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் “கூலி”படத்தில் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வந்தது. ஆனால் இதே போல ஒரு வாய்ப்பு கிடைத்த போது அதனை ஏற்க மறுத்துவிட்டாராம் சத்யராஜ். அதுவும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடமிருந்து வந்த அழைப்பு அது. “சிவாஜி” படத்தில் சுமன் நடித்த வேடத்தில் நடிக்க முதலில் சத்யராஜை தான் கேட்டாராம் ஷங்கர்.
“மிஸ்டர் பாரத்” படத்தில் ரஜினி-சத்யராஜ் இருவருக்கும் சமமான கேரக்டராக இருந்ததால் நடித்தேன். அதே போல “சிவாஜி” படத்திலும் பவர்ஃபுல்லான கேரக்டர் இருந்தால் நடிக்க சம்மதம் என சொல்லி விட்டாராம். இது தான் அவர “சிவாஜி” படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணாமாம்.
ஆனால் அதன் பின்னர் ரஜினி படத்தில் நடிக்க யாரும் தன்னிடம் கேட்கவில்லை. அதனாலும் ரஜினியுடன் இணையவில்லை. இதைத்தவிர வேறு காரணங்கள் ஏதும் கிடையாது ரஜினியுடன் நடிக்காமல் இருக்க என்றும் சொல்லியிருந்தார்.