vijayakanth sarathkumar
vijayakanth sarathkumar

நாட்டாமையும் நான் தான்…சூரியவம்சமும் எனக்கு தான்!…விஜயகாந்த் பெயரைக்கேட்டு வழி விட்டசரத்குமார்?…

இயக்குனர் விக்ரமன் விஜய், சரத்குமார், விஜயகாந்த், முரளி போன்ற நடிகர்களை வைத்து மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் தமிழ் சினிமாவிற்கு. விக்ரமனின் படம் ஒன்றில் சரத்குமார் இணைவதாக இருந்தது. “சூரியவம்சம்” படத்தில் சரத்குமாரை வைத்து இயக்கிய தன் பின்னணியை விக்ரமன் சொல்லி இருந்தார்.

“வானத்தைப்போல” படத்தினுடைய கதையை விஜயகாந்திடம் சொன்னது போல, சரத்குமாரிடமும் சொல்லி இருக்கிறார். கதை பிடித்து போக, சரத்குமார் நானே அண்ணன், தம்பி கேரக்டர்களையும் செய்து விடுகிறேன் என விக்ரமனிடம் ஆர்வமாக சொல்லி இருக்கிறார். அதற்கு விக்ரமனோ “நாட்டாமை” படத்தில் நீங்கள் இரட்டை வேடம் போட்டு விட்டீர்கள். அது கொஞ்சம் ஆக்ரோஷமான படம்.

vikraman
vikraman

உங்களுடைய நடிப்பு ஆக்ரோஷமாக இருக்க தேவையும் இருந்தது “நாட்டாமை”யில். ஆனால் இந்த படத்தில் மூத்த சகோதரனுடைய கேரக்டர் மிகவும் மென்மையானவராக இருப்பார். அதனால உங்களை நாட்டாமையிலேயே பார்த்துவிட்ட ரசிகர்கள் இந்த படத்தில் சாதுவாக பார்த்தால் ஏற்றுக்கொள்வார்களா? என தெரியாது என சொல்லி இருக்கிறார்.

சரத்குமாருக்கோ விக்ரமம் சொல்லியிருந்த வானத்தைப்போல படத்தின் கதை மிகவும் பிடித்துப்போனதாம். படத்தை விட்டுக்கொடுக்க அவருக்கு மனமில்லாததௌ போல தான் இருந்தாராம். விஜயகாந்தும், சரத்குமாரும் நல்ல நண்பர்கள் என்பது கோலிவுட்டிற்கு  தெரிந்த விஷயம் தான்.

தனது நண்பர் வானத்தைப்போலவில் நடித்ததால் மகிழ்ச்சி அடைந்திருப்பார் சரத்குமார். திரைத்துறையில் தனக்கு நெருங்கிய நண்பர் யார் என்ற கேள்விக்கு சமீபத்தில் மறைந்த விஜயகாந்த் என கூட சொல்லியிருந்தார். சரத்குமார்.

படத்தை தயாரிக்கயிருந்த தயாரிப்பாளரும் சரத்குமாரையே பரிந்துரைத்துள்ளார். இல்லை அவருக்கு வேறு ஒரு கதையை நான் தயார் செய்து தருகிறேன் என சொல்லிவிட்டாராம் விக்ரமன்.
அப்படி அவர் சொன்ன கதையின் மூலம் உருவான படம் தான் சூரியவம்சம்.