cinema news
காதலுக்கு கேட் போட்ட சரத்குமார்!…நாட்டாமை மட்டும் தீர்ப்ப மாத்தி சொல்லியிருந்தா வரலட்சுமியோட வாழ்க்கை?…
காதலை மையப்படுத்தி தான் அதிகமான படங்கள் எடுக்கப்பட்டு வந்திருக்கிறது தமிழ் சினிமாவில். காதலை வித்தியாசமான பரிமாணத்திலும் வெவ்வேறு கோணத்திலும் சொல்லப்பட்டதால் பல வெற்றிகள் கிடைத்து. இந்த வெற்றிகள் அந்த படங்களில் நாயக, நாயகிகளின் வாழ்க்கை உயர அஸ்திவாரமாக மாறியது.
காதலை சுற்றியே படங்கள் எடுக்கடப்பட்டது. ஆனால் ஒரு படத்திற்கு “காதல்” என்றே பெயரிடப்பட்டு வெளிவந்தது. அந்த படமும் சூப்பர், டூப்பர் ஹிட்.
இயக்குனர் சங்கரின் உதவியாளரான பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த “காதல்” படம் வெளியாகி தியேட்டர்களில் கூட்டம் அலைமோத வைத்தது. அந்த படத்தினுடைய வெற்றியை பார்த்து அசந்து போய் நின்றது தமிழ்த்திரை உலகம்.
யதார்த்தமான ஒரு கதை களத்தை கொண்ட இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது சரத்குமாரின் மகள் வரலட்சுமி தானாம். ஆனால் அந்த நேரத்தில் சரத்குமார், வரலட்சுமியை நடிக்க வைக்க ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால் தான் சந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
என்ன பிரயோஜனம் சந்தியாவுக்கும் அதன் பிறகு வந்த படங்கள் சரியாக ஓடவில்லை இருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் என்றும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது “காதல்” தான். அதே போல தான் பரத்திற்கும் இது மிகப்பெரிய திருப்புமுனையை தந்த படமாகவே இருக்கிறது.
“காதல்” போல பரத் இது வரை இன்னொரு வெற்றிப்படத்தை கொடுக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது. ஒரு வேளை வரலட்சுமி நடித்திருந்தால் அந்த படம் ஆன ஹிட்டுக்கு அவருக்கு ஒரு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு தமிழ் சினிமாவில் அமைந்திருக்குமோ? என நினைக்க வைத்திருக்கும்.