தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற இயக்குனர்களில் முக்கியமானவர் ஷங்கர். படங்களில் எடுத்துக் கொண்ட கதையின் கருவும், அதை கையாண்ட விதமும், காட்சிகளில் இருந்த பிரம்மாண்டமும் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது…
ரஜினி, கமல், விஜய் என இவர் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னனிகள் நடித்துள்ளனர். தன்னுடைய வெளிநாடு சுற்றுப்பயணம் பற்றிய ஒரு அனுபவத்தை பகிர்ந்து இருந்தார் ஷங்கர். விமான நிலைய பரிசோதனையில் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற்றதாம்.
அப்போது இவர் மீண்டும் , மீண்டும் பரிசோதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் தனியாக நிற்க வைத்து விட்டார்களாம் வெகு நேரம். இப்படி ஆகிவிட்டதே தனது நிலை என வருத்தப்பட்டு நின்றாராம் ஷங்கர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த ஷங்கரின் ரசிகர் ஒருவர் விமான நிலைய அதிகாரியிடம் இவர் இந்தய சினிமாவின் பிரபலம் என்றும் தமிழில் பல பிரம்மாண்ட வெற்றி படங்களை எடுத்துள்ளார் என விளக்கியுள்ளார்.
திரைப்பட இயக்குனரா?, அப்படி எந்த படத்தை எடுத்திருக்கிறார்? என அந்த வெளிநாட்டு அதிகாரி கேட்க, ரசிகரோ “காதலன்” படத்தை மட்டும் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.
“காதலன்”படத்தை பற்றி அறிந்திராத அந்த ஆபீசர் யோசிக்க, “முக்காலா முக்கபுல்லா”ன்னு ஒரு பாட்டு கூட வரும் குறிப்பிட்டிருக்கிறார் ரசிகர்.
உடனே விமான நிலைய அதிகாரி என்ன சொல்றீங்க அந்த பாட்டு எடுத்தது இவரா? என ஆச்சரியத்துடன் கேட்டிருந்திருக்கார். நல்ல பாடலாச்சே என சொல்லிவிட்டு ஷங்கரை பார்த்து நீங்க போங்கன்னு சொல்லி அனுப்பிவைத்தாராம்.
உலகளவில் தனக்கு ஒரு அடையாளத்தையும், புகழையும் தான் வளரும் நாட்களிலேயே பெற்று தந்தது பாடல் என் மகிழ்வோடு சொல்லியிருந்தார்.