Latest News
வெயிலோட விளையாட முடியாம போக இருந்த பசுபதி?…முட்டுகொடுத்த மும்பை எக்ஸ்பிரஸ்?…
ஷங்கர் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கிய படம் “வெயில்”. பரத், பாவனா நடிப்பில் வெளியானது. படத்தில் பசுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
வில்லனாக மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பசுபதி “வெயில்” படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். விஜயுடன் “திருப்பாச்சி”, கமலுடன் “விருமாண்டி”, விக்ரமுடன் “தூள்”, “அருள்” படங்களில் நடித்தவர்.
“சுள்ளான்” படத்தில் தனுஷுக்கு வில்லன் பசுபதி தான். “வெடிகுண்டு முருகேசன்” படத்தின் ஹீரோவும் இவர் தான். சென்டிமென்ட் படமாக வெளிவந்து படம பார்த்தவர்களை உருக வைக்கும் விதமாக நடித்திருந்தார் “வெயில்”படத்தில் பசுபதி.
“அங்காடி தெரு” பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய படம் “வெயில்”.
படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்து ரசிகர்கள் மத்தியில். முருகேசன் என்ற கேரக்டரில் நடித்தார் பசுபதி. தம்பி பரத் மீது அதிக பாசம் கொண்டவர், தனது அப்பாவால் தண்டிக்கப்பட்டு வீட்டை விடு வெளியேறுகிறார்.
ஒரு தியேட்டரில் வேலைக்கு சேருகிறார். அங்கே எதிர் வீட்டிலிருக்கும் பெண் தங்கத்தின் மீது காதல். அவள் இறந்து விட குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகிறார் பசுபதி.
இருபது ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு செல்கிறார். பிரிந்த குடும்பத்தோடு எப்படி சேருகிறார், என்ன நடக்கிறது இது தான் மீதி கதை.
பசுபதி நடித்த அண்ணன் கேரக்டரில் நடிக்க வேறு சில நடிகர்களை தான் தேர்ந்தெடுக்க நினைத்தாராம் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர். சூர்யா, முரளி, அர்ஜூன், எஸ்.ஜே.சூர்யா,சேரன் இவர்களில் ஒருவர் தான் ஷங்கரின் தேர்வாக இருந்ததாம்.
“மும்பை எக்ஸ்பிரஸ்” படத்தில் பசுபதி நடித்து விதத்தை பார்த்த வசந்த பாலன் தான் இவருக்கு ஷங்கரிடம் ரெக்கமெண்ட் செய்தாராம்.