sandy
sandy

கொரொனா பாடல் பாடி அசத்திய சாண்டி மாஸ்டர்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில் கொரொனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கொரொனாவால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 690 எட்டி உள்ளது.

இதனை தொடர்ந்து, கொரொனா விழிப்புணர்வு பாடல்களை பல்வேறு பிரபலங்கள் பாடிக்கொண்டு அசத்தி வருகின்றனர். அந்த வகையில், பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தன் மகளுடன் ஆடி பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் பிக் பாஸ் சீசன்3யில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். இவருக்கு சென்னையில் சொந்தமாக நடனப்பள்ளி ஒன்றும் உள்ளது. இதனை தொடர்ந்து இவர் நேற்று தன் மகள் லாலாவுடன் கொரொனா விழிப்புணர்வு பாடலை வீடியோவாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார், இதுதான் இப்போது இணையத்தில் வைரல்.