சம்யுக்தா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
தமிழ் சினிமாவுக்கு கேரளத்து வரவான நடிகை சம்யுக்தா மேனன் கேரளாவில் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்து பள்ளி பருவத்திலேயே நிறைய நாடகங்களிலும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதன் பிறகு மாடலிங் துறைகளில் நீண்ட காலம் பணியாற்றி நடிப்பு கலையை கற்றுக்கொண்டார்.
முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு பாப்கார்ன் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் முதன்முதலாக அறிமுகமானார். முதல் படமே நல்லவரவேற்பை பெற்றதால் அம்மணி கவனம் ஈர்க்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து தீ வண்டி, லில்லி போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்களும் ஹிட் அடித்தது.
இதனால் மற்ற மொழிகளில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஓஹோன்னு பேசப்பட்டார். இருந்தாலும் தமிழில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரவில்லை. எனவே, எப்படியாவது வாய்ப்புகளை வாங்குவதற்காக விதவிதமான உடைகளில் கிளாமர் காட்டி கவனம் ஈர்க்கிறார். இந்நிலையில் தற்போது சேலையில்பூச்செண்டை வைத்துக்கொண்டு அழகாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்கள் ரசனையில் மூழ்கியுள்ளார்.