சம்யுக்தா ஹெக்டேவின் கொரோனா துயரங்கள்

39

தற்போது கொரோனா இரண்டாவது அலை பெரு வேகமெடுத்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல திரைப்பிரபலங்களும் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாசனை நுகரும் தன்மையையும் இழந்தாராம்.

என்னை உதவி அற்றவளாக உணர்கிறேன். நான் அதிகமாக நேசிப்பவர்களை இழந்து விடுவேனோ என்ற பயம் வந்தது. மரண பயம் கொடுமையானது.
அம்மா, அப்பாவும் கொரோனா பாதிப்பில் இருந்தனர். எங்களுக்கு அந்தஸ்தும் ரசிகர்களும் இருந்தாலும் நோய் விஷயத்தில் உதவியற்றவர்களாகவே உணர்கிறோம். எனது அறையில் அடைபட்டு அழுதேன். என் அம்மாவை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நம்மில் பலர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை என சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார்.
பாருங்க:  கலங்க வைக்கும் நடிகர் தவசியின் மரணம்
Previous articleமாமனிதன் படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு
Next articleமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பரபரப்பு புகார்