Connect with us

அம்மாடியோவ் பத்து வருஷமா எப்படி இத மெயின்டைன் பண்றீங்க?… நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சமந்தா!…

nayanthara samantha

cinema news

அம்மாடியோவ் பத்து வருஷமா எப்படி இத மெயின்டைன் பண்றீங்க?… நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சமந்தா!…

சமந்தா நடிக்க வந்த சில நாட்களிலேயே செம்ம பாப்புலர் ஆனார். “நான்-ஈ” படத்தில் பேசப்பட்ட நடிப்பு தொடரந்து வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்தது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு சினிமா உடப்ட. சூர்யா வுடன் “அஞ்சான்”, விஜயுடன் “தெறி” என தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாகவும் மாறினார்.

திடீரென சரும நோயினால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்த விரைவாக மீண்டு வந்து, மறுபடியும் நடிப்பை தொடர்ந்தார். நடனம், நடிப்பு இவரது இந்த துடுக்குத்தனத்தை ரசிக்க ஒரு தனிக்கூட்டம்.

இப்படி வி.வி.ஐ.பி. யாகவே மாறினார் சமந்தா. ரசிகர்களின் கணவுக்கன்னி என்றெல்லாம் சொல்லப்பட்டவர் இவர். இது உண்மைதான் என நிரூபிக்கும் சர்வே ஒன்று இதனை உறுதிப்ப்டுத்தியுள்ளது.

samantha

samantha

ஜனவரி 2014 முதல் ஏப்ரல் 2024 வரையிலான ஐ.எம்.டி.பியின் பட்டியல் வெளியானது. உலக அளவில் பார்க்கப்பட்ட முதல் 100 நட்சத்திரங்களின் பட்டியலும் வந்தது. இதில் 13வது இடத்தில் இருக்கிறார் சம்ந்தா. அதோடு மட்டுமல்லாமல் இந்த வரிசையில் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் இவர் தான் டாப்பில் உள்ளாராம்.

இந்த லிஸ்டில் 16வது இடத்தில் தமன்னாவும், 18வது இடத்தில் நயன்தாராவும் இருக்கின்றார்களாம். தன் மீது நம்பிக்கையும், அன்பும் கொண்டுள்ள ரசிகர்களுக்கு தனது நன்றியை சொல்லிகொள்வதாக சமந்தா சொல்லியிருக்கிறார். அதோடு தனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்க உதவியாக இருந்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், எழுத்தாளர்கள் என சினிமாவை சார்ந்த அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என நயன் தாரா சொல்லப்பட்டு வந்தாலும், சமந்தா செய்துள்ள இந்த சம்பவம் நயன் ரசிகர்களை கடுப்பேத்தி கூட விட்டிருக்காலாம் என்கின்றனர் நெட்டிசனகள்.

 

More in cinema news

To Top