cinema news
சறுக்கிவிட்டாரா சாமானியன்?…. வெள்ளிவிழா நாயகனுக்கு வந்த சோதனையா இது…கலங்க வைத்த கலெக்ஷன்?…
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து ராமராஜன் நடித்துள்ள படம் “சாமானியன்”. இவரை திரையில் மீண்டும் பார்த்து விட மாட்டோமா என ஏங்கி தவித்து வந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை “சாமானியன்” மூலமாக தீர்த்து வைத்து விட்டார் ராமராஜன் என்றே சொல்லலாம். ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே.எஸ்.ரவிக்குமார் என முகம்தெரிந்த முன்னனிகளின் பலத்தோடு களத்திற்கு வந்துள்ளார் இவர்,
வங்கி கொள்ளை தான் படத்தின் கதை ஏன், எதற்காக இந்த வழியை தேர்ந்தெடுத்தார் ராமாராஜன் என்பதை விளக்கமாக சொல்லி மங்களமாக முடித்து வைப்பதே க்ளைமேக்ஸ். படத்தின் வசூல் பற்றி பல்வேறு செய்திகள் வந்த வண்ணமே உள்ளது.
ராமராஜன் படங்கள் ஒருகாலத்தில் செய்துக்கொடுத்த வசூலை பற்றி பேசினால் வாயடைத்து போவார்கள் என்றே சொல்லலாம்.
அப்படிப்பட்ட சாதனைகளை செய்துள்ளார் இவர், “கரகாட்டக்காரன்” படம் செய்த சாதனையை இன்று வரை வேறு எந்த படங்களாலும் முறியடிக்க முடியவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால் அதெல்லாம் பழங்கதை, காலம் மாறிவிட்டது. 2கே கிட்ஸின் ரசனைக்கு ஏற்றார் போல இருக்கும் படங்களே அதிகமாக வெற்றிகளை பெருகிறது எனலாம்.
திரையரங்குகள் பலவற்றில் “சாமானியன்”க்கு சரியான வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை 23ம் தேதி படம் வெளியானது. முதல் நாளில் 7 லட்ச ரூபாயும், இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை 3 லட்ச ரூபாயும் வசூலித்துள்ளதாக சமூக வலைதளம் சொல்லியுள்ளது. நேற்றும் இன்றும் விடுமுறை தினங்கள் என்பதால் படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வசூல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் வெற்றி, தோல்வியே ராமராஜன் கொடுத்துள்ள கம்-பேக்கை சரி தவறு என உறுதிப்படுத்தி, அவரது மார்கெட் குறித்த அடுத்த கட்ட-காய் நகர்வுகளை செய்ய வைக்கும் எனவும் நம்பப்படுகிறது.