என்.ஜி.கே படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து நடிகை சாய்பல்லவி பகிர்ந்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் என்.ஜி.ஏ. இப்படத்தில் அரசியலில் களம் இறங்கும் வாலிபராக சூர்யா நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சூர்யாவின் மனைவியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.
இப்படத்தில் நடித்தது பற்றி சமீபத்தில் பேட்டியளித்த சாய்பல்லவி ‘நடிப்பு என்றால் என்ன என்பதை செல்வராகவன் படப்பிடிப்பில் கற்றுக்கொண்டேன். அவருக்கு தேவையானது வரும்வரை விடமாட்டார். ஒருநாள் ஒரு காட்சியை காலையிலிருந்து மாலை முதல் படமாக்கினார். ஆனால், நான் காட்டிய முகபாவனை அவருக்கு திருப்தியாக இல்லை. எனவே, நாளை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டார். அன்று இரவு முழுவதும் அழுதேன். நடிப்பை விட்டு விடுகிறேன் என என் அம்மாவிடம் கூறினேன். ஆனால், அடுத்தநாள் ஒரே டேக்கில் ஒகே செய்து விட்டேன்’ என அவர் பேட்டியில் கூறியுள்ளார்.