ss rajamouli next film mahabharata

S.S.ராஜமௌலியின் கடைசி படம் மகாபாரதமா?

பிரம்மாண்ட படைப்புகளை தன் திரைப்படங்களில் கொடுப்பவர் இயக்குனர் ராஜமௌலி. இதிகாச கதைகள், வரலாற்று கதைகளை பிரமாண்டமாக எடுப்பதில் ஆர்வம் காட்டுவதோடு, அவற்றை வெற்றி படங்களாகவும் கொடுத்துள்ளார்.தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து இவர் இயக்கிய பாகுபலி நாடு முழுவதும் வரவேற்பை பெற்றது.

தற்போது, ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹிந்தி நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றர். இதில் சமுத்திரகனியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ராஜமௌலியின் கனவு படம் மகாபாரதம், இவரது அடுத்த படைப்பு மகாபாரதமாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்ஆர்ஆர் படக்குழு சார்பாக செய்தியாளர்களை சந்தித்த ராஜமௌலி, தனது அடுத்த படம் மகாபாரதம் அல்ல என கூறினார்.

ஆனால், தனது கடைசி படமாக மகாபாரதம் இருக்கும் எனவும், மகாபாரதக் கதையை படமாக்கினால், நிச்சயம் நான்கு, ஐந்து பாகங்களாக வெளியாகும் எனவும், மகாபாரதக் கதை தன் மனதில் ஓடிக்கொண்டிருப்பதாகவும், அது தான் தன் கடைசி படைப்பாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.