போதையில் கார் ஓட்டினேன் என்று கதை கட்டி விட்டார்கள்! மிரட்டல் நாயகி

376

தமிழில் நடிகர் வினை நடித்த மிரட்டல் படத்தின் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷர்மிளா.

Mirattal
Mirattal

இவர் கன்னட, தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழில் வாய்ப்பு இல்லாததால் தமிழ் படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி தமிழில் திரைக்கு வர இருக்கும் படங்களான விமல் நடித்த சண்டைகாரி, அட்டகத்தி தினேஷ் நடித்த நானும் சிங்கிள் தான் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இப்பொழுது இவர் போதையில் கார் ஓட்டியதாக பல ஊடகங்கள் ஷர்மிளாவை குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஷர்மிளா அதற்கான விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி, தான் மிகுந்த வயிற்று வலியால் அவதிபட்டதாகவும், அப்போது தன் நண்பர் லோகேஷ் உடன் காரில் சென்ற போது திடீரென்று கார் விபத்துக்குள்ளானது என்றும், எதிர்பாராதவிதமாக கையிலும் முகத்திலும் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதன்பின் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இப்பொழுது டாக்டர்கள் அறிவுரையின் பேரில் வீட்டில் ரெஸ்ட் எடுத்து வருவதாகவும் கூறி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் உண்மை ஏதும் தெரியாமல் பலர் நான் குடி போதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளானதாக தேவையற்ற கதை கட்டி வதந்திகளை பரப்பி வருகின்றார்கள் என்றும் கோபத்துடன் கூறியுள்ளார்.

பாருங்க:  ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து
Previous articleஅதெல்லாம் பொய் உண்மையை போட்டு உடைத்த அஞ்சலி
Next articleஏப்ரல் 06 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்