Connect with us

பார்க்கலாமா?…வேண்டாமா?…படத்தை…ரசவாதி விமர்சனம்.

rasavaathi

cinema news

பார்க்கலாமா?…வேண்டாமா?…படத்தை…ரசவாதி விமர்சனம்.

அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் “மகாமுனி”, “மௌன குரு” போன்ற படங்களை இயக்கியிருந்த சாந்தகுமார் இயக்கி உள்ள படம் “ரசவாதி”.  அர்ஜுன் தாஸ். இவரும் தன்யா ரவிச்சந்திரன் இருவரும் காதலர்கள்.

கொடைக்கானலுக்கு வருகிறார் காவல் அதிகாரி சுஜித் ஷங்கர். காதலர்கள் அர்ஜூன், தன்யா மீது இவருக்கு ஏதோ பொறாமை போல. இவர்களின் மீது உள்நோக்கதோடு , அவர்களை குறி வைத்தே  செயல்படுகிறார் வில்லன் சுஜித் ஷங்கர்.

rasavaathi

rasavaathi

இதன் காரணம் என்ன என்பதை விவரிக்க அவருக்கு ஒரு பிளாஷ் பேக், அதே  போல பல பிரச்சினைகளில் சிக்கி வாழ்க்கை தடம் மாறி போய் அமைதிக்காக கொடைக்கானலுக்கு வந்துள்ள கதாநாயகன் ‘சித்தா’, அர்ஜுன் தாசுக்கு ஒரு பிளாஷ் பேக்.

இப்படி கதைக்குள்ளேயே கதை. படம் எதிர்பார்த்த அளவு ஸ்பீட்  இல்லை. இயக்குனர் சாந்த குமாரின் முந்தைய படங்கள் மெதுவாக நகர்ந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளை பற்றிய ஆர்வம் தூண்டப்பட்டு கொண்டே தான் இருந்தது. ஆனால் “ரசவாதி”யில் அதற்கான வாய்ப்பு இருக்கின்ற மாதிரியே தெரியவில்லை.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குனர். மற்றபடி அர்ஜுன் தாஸ் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் கதாநாயகி ரேஷ்மா வெங்கடேஷன், தன்யா ரவிச்சந்திரனை விட நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்திற்கு இசை பலமே. ஒளிப்பதிவு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. வில்லன் சுஜித் ஷங்கர் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். அவருக்கே அதிகமான கைத்தட்டல்கள் கிடைக்கிறது படத்தில். திரைக்கதையை இன்னும் சரியாக கொண்டுபோயிருந்தால் படம் நல்லா இருக்குன்னு சொல்லியிருப்பார்கள் போல பார்த்தவர்கள். காலாவதியான திரைக்கதையால் படம் பார்க்க வந்தவர்கலை அவதிக்குள்ளாகியிருக்கிரதாம் “ரசவாதி”.

More in cinema news

To Top