போன வருஷம் மே மாசம் திடீர்னு ஒரு அப்-டேட் அஜீத்துடன் இணையும் மகிழ்திருமேனின்னு. போட்றா வெடியன்னு ஆடிப்பாடி அலப்பறை பண்ணிவிட்டாங்க அஜீத் ரசிகர்கள். படத்தோட பெயர் “விடாமுயற்சி”. இதுக்கு நிறைய ட்ரோல்ஸ் வேற.
அஜீத்துக்கு எப்பவுமே ‘வி’ சென்டிமென்ட் உண்டு, அதனாலயும் படம் பேரு இந்த மாதிரி வைச்சிருக்காங்கன்னு முட்டுக்கொடுத்த அஜீத் ஃபேன்ஸ். படம் பெயர் வந்தோட சரி அதுக்கு அப்புறம் ஒரு சின்ன அப்-டேட் கூட கிடையாது. கெஞ்சி, கதறி பாத்தாங்க அஜீத் ஃபேன்ஸ்.
அதுக்கெல்லாம் அசரவேயில்ல படத்தோட ப்ரொடியூசர், டைரக்டர். சரி அப்-டேட் வரலேன்னா என்ன படம் எப்போ வரும்ங்கிற சஸ்பென்ஸ்லயே ட்ராவல் பண்ணாலாம்ன்னு முடிவி செஞ்சாங்க ஃபேன்ஸ்.
ஷூட்டிங் நடக்குறதிலேயே நிறைய ப்ராப்ளம்ன்னு அடுத்தடுத்து அதிர்ச்சி தான் வந்தது “விடாமுயற்சி”க்கு. ரீசென்டா அர்ஜூன் சொன்ன அந்த வார்த்தை மட்டும் தான் அஜீத் ஃபேன்சுக்கு ஆறுதல். இன்னும் 20 -30% ஷூட் மட்டும் தான் பாக்கிங்கிறது. நேற்று தன்னோட ஃபேன்ஸ் குஷியாகுற மாதிரியான ஒரு நியூஸை வெளிவிட்டாரு ஏ.கே.

அஜர்பைஜானுக்கு கிளம்பியாச்சு, ஓரே ஷெடியூல்ல படத்த முடிச்சிடுவாங்கன்னு இப்போ முழு நம்பிக்கையோட இருக்காங்க தல ஃபேன்ஸ். அப்படீன்னா ஒம்போது வருஷத்துக்கு அப்புறமா இது அஜீத் ரசிகர்களுக்கு தல தீபாவளி தானா?.
இப்போ ட்ரெண்டிங் நியூஸ் எதுன்னு பார்த்தா அது அஜீத் ஏர்போர்டல இருந்து அஜர்பைஜானுக்கு கிளம்புற பிக் தான். ரெண்டு நாள் முன்னால தல திருப்பதில சாமி தரிசனம். தன்னோட ஃபேன் கொடுத்த கிஃப்ட வாங்குற ஃபோட்டோ, நேத்து சாய்ங்காலம் கிரிக்கெட் விளையாடுற பிக். அஜீத்தை அடுத்தடுத்து பாத்துக்கிட்டு வர்ற எஞ்சாய்மெண்ட் மூட்ல தான் இப்போ ஏ.கே.ஃபேன் கிளப்ஸ்.