“விடாமுயற்சி” படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரீலீஸ் பண்ணியே தீருவேன்னு மகிழ்திருமேனி மனமிறங்கி வேலைகளை மீண்டும் ஆரம்பிச்சிருக்கிறதா தகவல் வெளிவந்தது உண்மையா, பொய்யான்னு தெரியாது, ஆனா அது உண்மையா இருக்கனும்னு அது சந்தோஷம் கொடுக்கும்னு அஜீத் ரசிகர்கள் வேண்டிக்கிட்டு இருக்காங்க.
அதே நேரத்துல ஆதிக் ரவிச்சந்திரனின் “குட் பேட் அக்லி” படத்தோட ஷூட்டிங் சும்மா ராக்கெட் வேகத்துல போய் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துக்கிட்டே இருக்கு. இதெல்லாமே உறுதிப்பட்ட தகவல்கள்ங்கிறதனால ஃபேன்ஸ் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. ஒரே நேரத்துல் “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” ன்னு ரெண்டு பட ஷூட்டிங்லயும் அஜீத் கலந்துக்கிட்டு இருக்காராம்.
மூனு விதமான ரோல்கள்ல நடிக்கிறார் அஜீத். இதுல ரொம்ப ஹேப்பியா இருக்கிற ரசிகர்களை இன்னும் சந்தோஷப்பட வைக்கிற மாதிடியான போட்டோ இப்போ வைரல் ஆகிட்டு வருது.
பொங்கல் ரிலீஸ்ன்னு பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்லயே சொல்லிட்டாங்க, இதானால பட ரிலீஸ் அப்டேட்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாம போச்சு அஜீத் ஃபேன்ஸுக்கு. அடுத்து அஜீத் மூனு விதமா இருக்குற மாதிரியான அடுத்த போஸ்டர், இப்படி அடுத்த அடுத்த அப்டேட்ஸ் படத்தை பற்றி.
இன்னொரு பக்கம் சிரஞ்சீவி அஜீத் சந்திப்பு படம் வேற வைரல் ஆனது. இப்படி அடுத்த அடுத்த அதிரடி அப்டேட்ஸ் அஜீத் ரசிகர்களை ஆர்ப்பாட்டம் பண்ண வச்சிக்கிட்டு இருக்கு.

“குட் பேட் அக்லி” ஷூட்டிங் ஸ்பாட்ல எடுத்த படம் இப்போ வெளியாகியிருக்கு. படத்தோட டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் பக்கத்துல அஜீத் நிக்கிறார். ஒரு கண்ணாடியை முகத்துல மாட்டிக்கிட்டு ரொம்ப க்யூட், ஹேன்ட்சமா இருக்காரு அஜீத் . படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக சொல்லியிருக்கிறது படக்குழு. ஒரு மாஸ் பாடல் ,சண்டை காட்சிகள் இதில் அடங்குமாம்.