ரஜினியின் திரை வரலாற்றில் மிக,மிக முக்கியமான படங்களாக இருப்பது “அண்ணாமலை”, “பாட்ஷா”. இரண்டு படங்களும் வேற லெவல் வெற்றிகளை பெற்றது. நட்பு, துரோகம் இதையெல்லாம் தாண்டி ரஜினி எப்படி வெற்றி பெருகிறார் இது தான் “அண்ணாமலை” படத்தின் கதை சுருக்கம்.
டான் எப்படி அமைதியான வாழ்க்கையை வாழுகிறார். அதில் என்ன இடஞ்சல்கள் வருகிறது. அதை எல்லாம் எப்படி கடந்து வருகிறார் இது தான் “பாட்ஷா” படத்தின் பே ஆஃப் லைன். இரண்டு படங்களுக்கும் இசையமைப்பாளர் தேவாதான். படத்திற்கு பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருந்தது பின்னணி இசையும் தான்.
இதே போல இந்த இரண்டு படங்களை இயக்கியது சுரேஷ் கிருஷ்ணா. இவருடைய திரை பயணத்தில் இந்த இரண்டு படங்கள் இன்றளவும் பேசப்படுகிறது.
“அண்ணாமலை”, “பாட்ஷா” படங்களை ரீ-மேக் செய்தால் அதில் யாரை ரஜினியின் இடத்தில் கதாநாயகனாக நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்விக்கு சுவாரசியமாக பதிலளித்திருந்தார் சுரேஷ் கிருஷ்ணா.

“அண்ணாமலை” படம் ரீ-மேக் ஆனால் அதிக் விஜய் தான் ஹீரோ.அவரைத்தவிர வேறு யாருக்கும் அந்த வேஷம் பொருந்தாது. அவரால் மட்டுமே அதை சிறப்பாக செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
அதே போல “பாட்ஷா” ரீ-மேக்கில் அஜீத் தான் ஹீரோ. மாணிக்கம், பாட்ஷா இந்த இரண்டு கெட்-டப்களுக்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என பேசியிருந்தார்.
சூப்பர் ஸ்டாரின் இரண்டு மெஹா ஹிட் படங்களை யாரையும் புண்படுத்தாமல் “அண்ணாமலை”யில் விஜய் நடித்தால் சூப்பராக இருக்கும். “பாட்ஷா” படத்தின் ஸ்டார் அஜீத் தான் என சமமாக பிரித்து கொடுத்து விட்டார் சாதூர்யமாகவும் கூட தானே இந்த முடிவு?.