எத்தனை தோல்விகளைப்பார்த்தாலும் நான் அதுக்கெல்லாம் அசருர ஆளில்லை என சொல்லி, தனது திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தருப்பவர் விஜய்சேதுபதி. பல படங்களில் சைடு ஆக்ட்ர். அத்தனை திறமைகள் இருந்தாலும் தனக்கான நேரம் வரும் காத்திருந்தவர்.

“தென் மேற்கு பருவக்காற்று” படத்தில் தான் முதல் திருப்புமுனை, அடுத்தது “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் அசடு வழியும் சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரம். குமுதா, குமுதா என இவர் படித்தில் வடித்த ஜொள்ளை ரசித்தார்கள் சினிமா பிரியர்கள்.
“சூதுகவ்வும்”, “தர்மதுரை” என தொடர்ச்சியாக பல படங்கள். வித்தியாசமான நடிப்பை கொடுத்திருந்தார் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில்.

ஹீரோ இமேஜில் கெட்டுவிடக்கூடாது என நினைக்காமல், கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் “மாஸ்டர்” படத்தில் விஜயை எதிர்த்த பவானியாக, “விக்ரம்”ல் சந்தானம் என வந்து கமலுக்கு வில்லனாக இப்படி நடிப்பில் அசத்தி வருபவர் விஜய்சேதுபதி.
இப்படி விஜயசேதுபதி படங்கள் என்றாலே தரமாகத்தான் இருக்கும் என கண்ணை மூடிக்கொண்டு தியேட்டருக்கு செல்லலாம் என்ற நம்பிக்கைய கொடுத்த தரமான நடிகர். எத்தனையோ ஏற்ற இறக்கங்களைபார்த்திருந்தாலும் தனது விடாமுயற்சியால் 50வது படம் என்ற மயாஜால எண்ணிக்கையை எட்டி விட்டார் சினிமாவில் இவர்.
பாரதிராஜா, மம்தா மோகன் தாஸ், அபிராமி, முனீஷ்காந்த், அருள் தாஸ் என நட்சத்திர கூட்டத்தோடு கோடம்பாக்கதிலிருந்து புறப்பட்டு நகர் வலம் வர காத்திருக்கிறார் “மகாராஜா”. விஜய்சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” படத்தின் டிரையலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.











