cinema news
வாய் பேச மறுத்த ரஜினிகாந்த்!…எல்லாத்துக்கும் காரணம் கூலி தானாமே?…
வெளி நாடு சுற்றுப்பயணம், இமய மலை பயணம் என எல்லாவற்றையும் முடித்து விட்டு இந்தியா திரும்பினார் ரஜினி. அதன் பிறகு அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்றும் வந்தார். இப்போது மீண்டும் சினிமா என இந்த வயதிலும் இளமையோடு வாழ்ந்து வருகிறார் ரஜினி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கயிருக்கும் “கூலி” படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
ரஜினி டானாக நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது ரஜினி ரசிகர்களிடையே படத்தின் டைட்டில் டீசர் வெளி வந்த பிறகு. ரஜினியின் கெட்-டப் அதை உண்மையாகத்தான் இருக்கும் என சொல்வது போல தான் இருக்கின்றதாம்.
“கூலி”க்கு முன்னரே துவங்கப்பட்டது “வேட்டையன்”. அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னனிகள் படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே இருக்கிறது.
“வேட்டையன்” படத்தில் ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் முடிந்து விட்டதாம். ஷூட்டிங் பணிகள் எல்லாமே ஏறத்தாழ முடிக்கப்பட்டு விட்ட நிலையில், ரஜினியை பொறுத்த வரை அவர் டப்பிங் பேச வேண்டியது மட்டும் தான் பாக்கியாம் படத்தில்.
டப்பிங் பேசுவது குறித்த தேதிகளை அவரிடம் கேட்ட போது “கூலி” படத்தின் ஃபர்ஸ்ட் செடியூல் முடிந்த பிறகு செய்யலாம் என சொல்லி விட்டாராம். இந்த தகவலை பிரபல விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.
தனது இமயமலை சுற்றுப்பயணத்தின் போது “வேட்டையன்” பட ரிலீஸ் குறித்து ரஜினி சொல்லிய தகவல் குறித்த வீடியோ பரவியது. அதனால் ரஜினி எடுத்த முடிவு சரியாகத்தான் இருக்கும். அவர் சொன்ன தேதியிலேயே “வேட்டையன்” வெளியாகி விடும் என நிம்மதி பெரு மூச்சு விடத்துவங்கியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.