cinema news
ராயன் ரிலீஸ் தேதி வந்தாச்சே!…ஐம்பதில் செஞ்சரி அடிக்க தயாராகும் தனுஷ்…
தனுஷுக்கு “சூர்யவம்சம்” படத்தில் சரத்குமார் பேசிய வசனம் ரொம்ப சரியாக பொருந்திவிட்டது. கஸ்தூரி ராஜவின் மகன் நடிக்க வந்திருக்கிறார்.செல்வராகவனின் தம்பி பாடியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்ட காலம் மாறி தனுஷின் அப்பா, தனுஷின் அண்ணன் எனஅவர்களை சொல்ல வைத்து விட்டார் தனுஷ்.
நடிக்க வந்த நேரத்தில் இவர் மீது வைக்கப்பட்ட விமர் சனங்களை வேறு யாராக இருந்தால் எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என தெரியாது. ஆனால் இவர் அதை எல்லாம் துட்சமாக நினைத்து வேற லெவெல் வளார்ச்சியை பெற்று விட்டார் சினிமாவில்.
தமிழ் சினிமாவில் மட்டும என்று சொல்லி உலக அளவில் இவருக்கு உள்ள புகழை குறைத்து விட முடியாது. ஹாலிவுட் வரை சென்று விட்டார் இவர்.
இவர் நடித்து வரும் 50வது படம் “ராயன்”. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் “ராயன்”ல் இவர் கதாநாயகன் மட்டும் கிடையாது. இவரே படத்தின் இயக்குனரும் கூடவே தான். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இவர்கள் இருவரின் காம்போவில் வந்த ஆல்பம் எல்லாமே ஹிட் தான். அதானால் கூட “ராயன்” இசையின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
படத்தின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. ‘அடங்காத அசுரன்’ பாடலில் ரகுமான், தனுஷ் இருவரின் குரல்களும் கேட்கிறது. இப்படி பல விதமான ப்ளஸ் பாயின்ட்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கக்கூடிய படமான “ராயன்”ன் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
“பவர் பாண்டி”க்கு பிறகு தனுஷ் இயக்கி உள்ள படம் இது. இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான “கேப்டன் மில்லர்” எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராரத நிலையில் ஒட்டு மொத்த தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது “ராயன்”. இந்த படம் ஜூலை மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சற்று முன் வெளியிட்டது படக்குழு.