cinema news
அடங்காத அசுரனாமே தனுஷ்…ரகுமானும் சேர்ந்தே பாடியிருக்காரே!..ராயன் ரிலீஸ் பற்றிய அப்-டேட்!.
“துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பாலிவுட்டை பார்த்து திரும்பிய பயணம், ஹாலிவுட்டை சென்றடைந்தது. இதை தனுஷின் சினிமா வாழ்க்கை குறித்த சுருக்கமாகவே எடுத்துக்கொள்ளலாம். கோலிவுட்டின் முன்னனிகளில் ஒருவரான இவரின் 50வது படம் தான் “ராயன்”.
50வது படம் என்பதாலோ என்னவோ தெரியவில்லை தனுஷ் அதிக ஆர்வம் காட்டுவது தெரிகிறது. “சன் பிக்சர்ஸ்” தயாரிக்கிறது “ராயனை”. கதாநாயகனாக மட்டுமில்லாமல் இந்த படத்தின் இயக்குனரும் தனுஷே தான். “பவர் பாண்டிக்கு” பிறகு அவர் இயக்கும் படம் இது.
இயக்கத்தோடு நின்று விடாமல் பாடலையும் எழுதியுள்ளார் “ராயன்” படத்தில். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றியுள்ளார். டான்ஸ் ஆடுவது என்பது தனுஷை பொறுத்தவரை அல்வா சாப்பிடுவது மாதிரித்தான். பிரபுதேவா சொல்லிக்கொடுக்கும் மூவ்மென்ட்ஸ்களை ஆடப்போகிறார் தனுஷ் என்றால் அது நிச்சயம் ஹிட் தான் ஆகும் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
இந்த படத்தின் ‘லிரிக்கல் வீடியோ’ வெளியிடப்பட்டுள்ளது சிலநிமிடங்களுக்கு முன்னர் தான். ‘அடங்காத அசுரன்’ என துவங்கும் இந்த பாடலை தனுஷேதான் பாடியும் உள்ளார். நடுவிலே ரகுமானின் குரலும் ஒலிக்கிறது. இவர்கள் இருவரும் இதற்கு முன் இணைந்த படங்களில் இசை வேற அளவில் தாறு, மாறு ஹிட் ஆனதால் ராயன் மீது அதிக எதிர்பார்ப்பு அதிகமாக கிளம்பியுள்ளது.
இந்த வீடியோவோடு மற்றுமொரு முக்கியமான அப் -டேட்டையும் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ். அது “ராயன்” படத்தின் ரிலீஸ் தேதி. வருகிற ஜூன் அதாவது அடுத்த மாதம் ’13’ம் தேதி படம் வெளியாக உள்ளது என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சொல்லியிருக்கிறார்கள்.