Connect with us

பாதியில் நின்ற பாடல்!…வீழ்த்தி விளையாடிய விதி… ஏ.ஆர்.ரஹ்மானே காரணம்…

sahul hameed

cinema news

பாதியில் நின்ற பாடல்!…வீழ்த்தி விளையாடிய விதி… ஏ.ஆர்.ரஹ்மானே காரணம்…

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி பிரபலமானவர் சாகுல் ஹமீது. ஏ.ஆர்.ரஹ்மானின் கண்ணிகளில் பட, அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். வசீகரக்குரலுக்கு சொந்தக்காரரான இவரை கையில் எடுத்த ரஹ்மான் கொடுத்த பாடல்களில் பெரும்பான்மையானவை சூப்பர் ஹிட்…

“வண்டிச்சோலை சின்ராசு” படத்தில் அவர் பாடிய ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே’ பாடல் இன்றும் பல இடங்களில் நாகரீகம் குறித்த விவாதங்கள் வரும் பொழுது உதாரணமாக சொல்லப்பட்டு வருகிறது.

“ஜென்டில்மேன்” படத்தில் இவர் பாடிய ‘உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி’ பாடல் இன்றளவும் காதுகளில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. “மே-மாதம்”திரைப்படத்தில் மனோரமா, வினித் பாடும் பாடலாக ‘மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்’ பாடலை மனோரமா உடன் இணைந்து அசத்தியிருப்பார்.

பாரதிராஜாவின் “கிழக்கு சீமையிலே” படத்தில் பாண்டியன் நடனமாடும்  கில்மா பாட்டான ‘எதுக்கு பொண்டாட்டி, என்ன சுத்தி வப்பாட்டி’ பாடலும் இவர் பாடியது தான்.

rehman

rehman

இவரது பாடல்களில் மக்கள் மனதில் அதிகமாக இடம் பிடித்த பாடலாக கருதப்படுவது “திருடா திருடா” படத்தில் வரும் ‘ராசாத்தி என் உசுரு என்னுதில்ல, நீ போனா என் உடம்பு மன்னுக்குள்ள’…

ரஹ்மான் இசையில் அதிகமான பாடல்களை பாடியுள்ள இவர் தேனிசைத் தென்றல் தேவாவின் இசையிலும் பாடியுள்ளார்.  சூர்யாவின் அறிமுக படமான “நேருக்கு நேர்” படத்தின் ‘அவள் வருவாளா?’பாடலை ஹரிஹரனுடன் இணைந்து பாடியிருந்தார்.

குறுகிய காலத்தில் பிரபலமான இவரின்  வாழ்வை முடித்து வைத்தது விதி.  சாலை விபத்தால் அந்த வசீகர குரல் காற்றோடு காற்றாய் கலந்து விட்டது.  அவருடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமாக காரணம் மிக முக்கிய காரணமாக அமைந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

More in cinema news

To Top