இப்போதெல்லாம் என்ன நடிக்கிறது என்பதே தெரியவில்லை அஜீத்தின் சினிமா கேரியரில். அஜீத் எப்போதுமே தன்னை பற்றிய செய்திகள் வெளிவராமல் அதிகாமாக பார்த்துக்கொள்வார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இவரை பற்றிய செய்திகள் வராதா? என ஏங்க வைத்தவர்.
பொதுத் தளத்தில் அதிகமாக இவரை பார்ப்பது கடினம். பட ப்ரமோக்கள், ஆடியோ லாஞ்ச்களை அட்டன்ட் பண்ணமாட்டார். ஆனாலும் இவரது பெயர் எங்காவது ஒரு இடத்தில் சொல்ல்பட்டால் அங்கே அதகளம் பண்ணி விடுவார்கள் இவரது ரசிகர்கள். கிரிக்கெட் போட்டிகளை பார்க்க சென்ற இடத்தில் கூட அப்-டேட் கேட்க வைத்தவர் அஜீத்.
இப்போது உள்ள நிலைமையோ தலை கீழ் என்று தான் சொல்லியாக வேண்டும். அஜீத் பற்றிய நியூஸ்கள் அடிக்கடி வந்து விழுகிறது, “விடாமுயற்சி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்த சில மணி நேரங்களைத் தான் கடந்திருக்கும் அதற்குள் அஜீத்தின் அடுத்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கருப்பு கலர் டி-ஷர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார் ஏ.கே. பார்க்கவே ரொம்ப ஸ்டைலாக இருக்கிறார் அஜீத். இந்த படம் தான் இப்போது வலைதளங்களில் வேகமாக வலம் வரத் துவங்கியுள்ளது.
“விடாமுயற்சி”படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரத்துவங்கினாலும் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளவில்லை அஜீத் ஃபேன்ஸ். டிவிட்டரில் இருக்கும் தங்களது ஆதிக்கத்தை அதிகரிப்பது என்பது மட்டுமே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. “குட் பேட் அக்லி” செகண்ட் லுக், “விடாமுயற்சி” ஃபர்ஸ்ட் லுக் என சோஷியல் மீடியாவில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார் அஜீத் இப்போதெல்லாம்.