Connect with us

பாக்யராஜ் இசையமைப்பாளராக மாற இளையராஜா தான் காரணமாமே!…வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்?…

baghyaraj and ilaiyaraja

cinema news

பாக்யராஜ் இசையமைப்பாளராக மாற இளையராஜா தான் காரணமாமே!…வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்?…

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் இயக்குனராகி பல வெற்றி படங்களை எடுத்து திரைக்கதை எழுதுவதில் இந்திய திரை உலகிலேயே சிறந்தவர் என தனக்கென்று ஒரு மிகப்பெரிய பெயரைக் கொண்டிருந்தவர் பாக்யராஜ்.

இயக்குனரானதும் தனது படங்களுக்கு இசையமைக்க இளையராஜாவையே நம்பியிருந்தாராம்.ஒரு முறை இளையராஜாவை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு பாக்யராஜ் சென்றிருக்கிறார். அங்கே இருந்த இளையராஜாவின் உதவியாளர் அவர் வீட்டுக்கு சென்று விட்டதாகவும், அவரை சந்திக்க வேண்டுமானால் நீங்கள் அவரது வீட்டிற்கு செல்லுங்கள் என சொல்லி இருக்கிறார்

அதற்கு பாக்யராஜ் தனிப்பட்ட விஷயம் என எதாவது இருந்தால் வீட்டிற்கு செல்லலாம், தான் வந்ததோ அலுவல் ரீதியாகதானே, எதற்கு அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என சொல்லிவிட்டு சென்றாராம்.

இது இளையராஜா காதுகளுக்கு எந்தவிதமாக போனதோ, அதை அவர் எப்படி புரிந்து கொண்டார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அதன் பிறகு அவர் பாக்யராஜை தொடர்பு கொள்ளவே இல்லையாம் போனில் கூட பேசவில்லையாம்.

ithu namma aalu

idhu namma aalu

இதனால் சற்று சோகமான பாக்யராஜ் இப்படி இசையமைப்பாளர்களை தாங்கி  இசையை பெறுவதை விட நாமே ஏன் இசையமைப்பாளராக மாறிவிடக்கூடாது என நினைத்தே இசையை கற்றாராம். சொல்லப்போனால் பாக்யராஜ் தனது படங்க்ளில் செய்யாமல் இருந்தது இசையமைப்பு மட்டுமே.

“இது நம்ம ஆளு” படத்தின் மூலமாக இசையமைப்பாளராகவும் அவர் அறிமுகமாகியிருக்கிறார்.  அந்த படத்தில் “சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்” என போட்டி பாடல்கூட வந்திருக்கும். அது இவர்கள் இருவர் இடையே நடைபெற்ற ஈகோ மோதலை வைத்துத்தான் எடுக்கப்பட்டது என பேசப்பட்ட தாம் அந்த நேரத்தில்.

More in cinema news

To Top