cinema news
ஆர்யா சுந்தர் கூட்டணியில் இருந்து பிரபல தயாரிப்பு நிறுவனம் விலகல் – காரணம் என்னாவது இருக்கும்??
ஹாலிவுட் பாணியில் கோலிவுட்லும் நிறைய திகில் படங்கள் வந்தாலும் அவற்றில் ரசிகர்களின் திகில் கலந்த எதிர்பார்ப்பையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியிலும் கலக்கிய படம் தான் அரண்மனை. இதில் அரண்மனை பார்ட் 1,2 – தொடர்ந்து அடுத்த பாகமாக வர இருக்கும் ஹொற்றோர் தான் அரண்மனை-3.
குஜராத்தில் உள்ள பிரமாண்ட அரண்மனையில் கடந்த மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இதில் ஆர்யா, மனோபாலா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஆக்ஷன் படம் சுந்தர்.சி இயக்கி கடந்த வருடம் வெளிவந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்து பாக்ஸ் ஆபிசில்லும் ஹிட் அடிக்காமல் போனதால்தான் சன் பிக்சர்ஸ் அரண்மனை-3 படத்திலிருந்து விலகியுள்ளதாக ஒருபுறம் கூற மற்றொருபுறம் அரண்மனை-3 அவ்னி சினிமேக்ஸ் தயாரித்து முடித்த பிறகு அதனை சன் பிக்சர்ஸ் வாங்கி படத்தை ரிலீஸ் செய்தாலும் செய்யலாம் என்று ஏதிர்பார்க்கப்படுகின்றது.