cinema news
எல்லாத்துக்கும் காரணம் அவரே தான்!…. மக்கள் நாயகன் மனச காயப்படுத்தியது யாரு?…
“கரகாட்டக்காரன்”, “எங்க ஊரு பாட்டுக்காரன்” இப்படி ராமராஜனின் வெற்றி படங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். இவரது படங்கள் ஒரு காலத்தில் அடைந்திருந்த வெற்றிகளை எண்ணிப்பார்த்தால் அது ஆச்சரியத்தை தான் தரும். இவரின் வெற்றிப்பயணம் தமிழ் சினிமாவில் நன்றாக பார்த்தால் நான்கு ஆண்டுகள் தான் இருக்கும். இதனை ராமராஜனே சொல்லியிருக்கிறார். நிற்க நேரம் இல்லாமல் இருந்துவந்தவர் இவர்.
“மேதை “படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு ராகேஷ் இயக்கத்தில் “சாமானியன்” படத்தில் நடித்திருந்தார். ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் என நட்சத்திர பட்டாளங்களும் களமிறங்கியது படத்தில். பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பியது ராமராஜனின் ரீ-என்ட்ரி என்பதற்காகவே.
“சாமானியன்” பட 25வது நாளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களை சந்திக்க சமீபத்தில் தென் தமிழகத்திற்கு வந்திருக்கிறார். அங்கே அவருக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ‘மக்கள் நாயகன்’ ராமராஜன்.
அப்போது படத்தின் தயாரிப்பாளர் மதியழகனை கடுமாய்யாக சாடினார். சரியான விளம்பரம் இல்லாமகல் போனதால் தான் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.ஆனாலும் படம் 25 நாள் வரை ஓடியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் தன் மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பு தான் என சொல்லியிருந்தார்.
படத்தின் தயாரிப்பாளர் கலைஞர்கள் அத்துனை பேரும் சேர்ந்து பிரசவ நேரத்தில் நடக்கும் ஆபரேஷன் போல படம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த அழகான குழந்தையை தயாரிப்பாளர் கொலை செய்து விட்டார் என சொல்லியிருந்தார்.
சமீபத்தில் “சாமானியன்” படம் குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் ராமராஜன் படத்தால் தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லியிருந்தார்.