பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு செப்டம்பர் 8ம்தேதி ரங்கீலா வெளியானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் திரையுலகில் மிக புகழ்பெற்றிருந்தார், மிக பிஸியாக இருந்தார் இந்த நேரத்தில் ஹிந்தியில் வந்த திரைப்படம் ரஹ்மானின் மார்க்கெட்டை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டது.
இந்திய அளவில் ரஹ்மான் புகழ்பெற இந்த ரங்கீலா படமும் ஆரம்ப கட்ட ஊக்க சக்தியாக இருந்தது என்றால் மிகையாகாது.
இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. மியூசிக்கல் ஹிட் படம் என ரங்கீலா படத்தை சொல்லலாம்.
அமீர்கான், ஜாக்கி ஷெராப், ஊர்மிளா போன்றோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ஹிந்திக்கு ஏற்றபடியாகவும் தமிழ் ரசிகர்களை கவர்வதற்காகவும் இருமொழியிலும் அதிக அளவில் பிரபலமான எஸ்.பி.பி, ஸ்வர்ணலதா, ஹரிஹரன், ஆஷா போன்ஸ்லே, கவிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பாடகர் பாடகிகளை பாட வைத்து ரஹ்மான் பாடல்களை கம்போஸ் செய்து இருந்தார்.
அதிக அளவில் ரஹ்மானை ஹிந்தியில் ரங்கீலா பாடல்கள் ரீச் செய்தது அவருக்கான மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது எனலாம்.
இந்த படம் தமிழ் , தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வந்தது படம் மற்ற மொழிகளில் அதிகம் ரீச் ஆகவில்லை என்றாலும், பாடல்கள் மிகப்பெரும் ஹிட் ஆனது அதனால் ரஹ்மானின் க்ராஃப் கொஞ்சம் ஏறியதும் உண்மை.
கடந்த 8ம் தேதியுடன் 25 வருடத்தை ரங்கீலா நிறைவு செய்வதால் இசை ரசிகர்கள் இதை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

