தெலுங்கு நடிகர் ராணா தக்குபாடி கடந்த 12ம் தேதி மிஹிகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் ”அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்” என்ற பதிவிட்டு சோஷீயல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து, தீடிரென்று நிச்சயதார்த்த போட்டோவை வெளியிட்டு, ”அது அதிகாரப்பூர்வமானது” என்ற பதிவுடன், தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனை பார்த்த, பலரும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று எண்ணி, திரைபிரலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை குவித்து வந்தனர்.
ஆனால், ராணாவின் தந்தை சுரேஷ் விளக்கமளிகையில், நிச்சயதார்த்தம் எதுவும் தற்போதைக்கு நடக்கவில்லை, இருவீட்டாரும் சாதாரணமாக ஒன்று கூடி பேசினோம், விரைவில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதிகள் முடிவானதும் நாங்களே வெளியிடுவோம் என்று அதிரடியாக தெரிவித்துயிருந்தார்.
இந்நிலையில், ராணா தக்குபாடி – மிஹிகா பஜாஜின் புடைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றது.








