ராம்கோபால் வர்மா மர்டர் படம் தடை நீங்கியது

ராம்கோபால் வர்மா மர்டர் படம் தடை நீங்கியது

ராம்கோபால் வர்மா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது அவர் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் பல சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கும்.

உண்மைக்கதை எடுக்கிறேன் என யாரையாவது பகைத்து கொள்வார் அவர்கள் படம் வெளிவர விடாமல் கோர்ட்டுக்கு செல்வார்கள் படம் சில நாள் வராமல் முடங்கி கிடக்கும்.

பொதுவாக ரத்தமும் சதையுமாகவே கதை சொல்லி பழக்கப்பட்டவர் ராம்கோபால் வர்மா அவர் தற்போது தெலுங்கானாவில் கொல்லப்பட்ட கால்நடை பெண் மருத்துவர் பற்றிய கதையை இயக்கி வருகிறார்.

அதேபோல் மர்டர் என ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் அய்யங்கார் மற்றும் சாகிதி நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு தடை விதிக்க சிலர் கோர்ட்டுக்கு சென்றதால் இப்படம் நிலுவையில் உள்ளது இருப்பினும் எப்படியும் படத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா.