Latest News
ரஜினி செய்த காரியம்…அதிர்ந்து போன ரமேஷ் கண்ணா!…மனுஷன் இப்படி பண்ணிட்டாரே?…
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ரமேஷ் கண்ணா. அஜீத்தை வைத்து “தொடரும்” படத்தை இயக்கியுள்ளார். குணச்சித்திர வேடங்களிலிலும், காமெடி கேரட்கடர்களிலும் அதிகம் இவர் நடித்துள்ளார். அதிலும் ரஜினி, அஜீத் இவர்கள் இருவருடன் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.
ரஜினியுடன் “படையப்பா” படத்தில் அவரது நண்பர்களில் ஒருவராக வந்திருப்பார். அதே மாதிரி தான் “முத்து” படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்த இரு படங்களையும் இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார்.
“முத்து” படத்தின் போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்திருந்தார் ரமேஷ் கண்ணா. படத்தில் டபுள் ஆக்டிங் செய்திருப்பார் ரஜினி. ஜமீந்தார் ரஜினியை வைத்து ஒரு காட்சி ஷூட் பண்ண வேண்டியது இருந்ததாம்.
கோட், சூட் போட்டு ரஜினி குதிரை வண்டியில் வந்து இறங்குவது தான் சீன். ‘லாங் ஷாட்’ என்பதால் ரஜினிக்கு பதிலாக ரமேஷ் கண்ணாவை டூப்பாக வைத்து ஷூட் பண்ணியிருக்கிறார் ரவிக்குமார்.
கட் சொல்லி முடித்து விட்டு க்ளோஸ்-அப் ஷாட்டுக்கு போகி விட்டாராம் இயக்குனர். ரமேஷ்கண்ணா ரஜினி போட்டு நடிக்க வேண்டிய கோட்டை போட்டு நடித்து விட்டார். அது வியர்வை பட்டு ஈரமாக இருந்ததாம்.
வேறு கோட்டும் இல்லையாம். சீன் எடுக்க ரஜினி கோட் அணிய வேண்டும் என்பதால் ரமேஷ் கண்ணா காஸ்டியூம் டிசைனரிடம் ஸ்ப்ரே அடித்து வியர்வை நாற்றம் போகச்செய்து, ஈரத்தினை காய வைக்கவும் கேட்டாராம்.
இதை பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ரஜினி வேற கோட் இல்லையா?. இப்போ அதனால என்ன? கூல் என சொல்லி ரமேஷ் கண்ணா போட்டு நடித்த அதே கோட்டை குடுங்க என கேட்டு வாங்கி அதை அணிந்து கொண்டு நடித்திருக்கிறார்.
எவ்வளவு பெரிய மாஸான ஹீரோ பேக்-அப் சொல்லி விட்டு போகாமல் பழைய கோட்டை போட்டு நடித்த ரஜினியின் பெருந்தன்மையை பற்றி பெருமையாக பேசி இருந்தார் ரமேஷ் கண்ணா.