ramesh panchu kannadasan
ramesh panchu kannadasan

பஞ்சு அருணாச்சலம் கண்ணதாசனுக்கே சாப்பாடு போட்டது ரமேஷ் கண்ணாவாம்!…இது புதுசா இருக்குன்னே…புதுசாஇருக்கு…

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ரமேஷ் கண்ணா. நகைச்சுவை நடிகராக படங்களில் தோன்றிவந்தாலும் இயக்குனராகவும் இருந்திருக்கிறார். அஜீத்தை வைத்து தொடரும் படத்தினை இயக்கியவர்.

“பிரண்ட்ஸ்” படத்தில் விஜய், சூர்யாவுடனும், “படையப்பா”வில் ரஜினியுடனும், “தெனாலி”யில் கமல்ஹாசனுடன், “வில்லன்”, “வீரம்” படங்களில் அஜீத்துடனும் நடித்திருந்தார். இதே போல வளர்ந்து வரும் நாயகர்கள்  பலருடனும் பணியாற்றியிருந்திருக்கிறார் இவர். திரைத்துறைக்கு வரும் முன்னர் வறுமையிம் பிடியில் சிக்கி தவித்து வந்தாராம் ரமேஷ் கண்ணா. சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலைதான் இருந்ததாம் ஒரு நேரத்தில்.

ramesh kanna
ramesh kanna

சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகள் பல இவருக்கு கடுமையான வேதனைகளை கொடுத்ததாம்.  ஹோட்டல் சப்ளையராக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டாம். ஒரு முறை ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்களுக்கு உணவு கொடுக்க நியமிக்கப்பட்டாராம். அங்கே பெரும்பாலும் வி.ஐ.பி.க்கள் மட்டும் தான் அதிகமாக வந்து தங்குவார்களாம்.

ஒரு நாள் ஒரு குறிப்பிட்ட அறைக்கு சென்று உணவு பரிமாறும் பணி வழங்கப்பட்டதாம் இவருக்கு. அறை கதவைத்திறந்த பின் அவர் பார்த்த காட்சிகளை அவாரலேயே நம்ப முடியவில்லையாம். வந்து பரிமாறுங்கள் என குரல் கேட்டதாம். இவர் உணவு எடுத்து வந்தது தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மற்றும் கண்ணதாசனுக்காம்.

இவர் கைகளால் இருவருக்கும் உணவை எடுத்து வைத்தாராம். ஆகையால் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே தனக்கும் வெள்ளித்திரைக்கும் தொடர்பு இருந்ததாகவும், அப்பேர்ப்பட்ட ஜாம்பவான்களுக்கு சாப்பாடு பரிமாறி அவர்கள் அருகே நிற்க வாய்ப்பு கிடைத்ததையும் தனது மலரும் நினைவுகளில்  முக்கியமான ஒன்றாக மகிழ்ச்சி பொங்க பேசியிருந்தார்.