cinema news
அவர் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்!…எஸ்.எஸ்.சந்திரனை கழற்றி விடச்சொன்ன ராமராஜன்… இடஞ்சலாய் இருந்த அரசியல்?…
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் இவரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. கவுண்டமணிக்கு அடுத்த படியாக கவுண்டர்கள் அடிப்பதில் வல்லவர் இவர் என்றும் சொல்லலாம்.
அதே நேரத்தில் தனது நக்கலான நடிப்பினாலும், இரட்டை அர்த்த வசனங்களாலும் பலரையும் கவர்ந்தவரும் கூட இவர். ரஜினியின் “மாப்பிள்ளை” படத்தில் வில்லங்களில் ஒருவராகக்கூட நடித்திருந்தார்.
அதிகம் காமெடி படங்களிலேயே நடித்திருந்தாலும் அவ்வப்போது வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான நடிப்பையும் வெளிப்படுத்தி வந்தவர் இவர்.
ராமராஜனின் வெற்றிப்படமான “கரகாட்டக்காரன்”ல் தவில் வித்வானாக நடித்திருந்தார் கவுண்டமணி. முதலில் அந்த வேடத்தில் நடிப்பதாக இருந்தது எஸ்.எஸ். சந்திரன் தானாம். நடிகராக மட்டும அல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டியவர் அவர். தான் சார்ந்திருந்த கட்சியை குறித்த வசனங்களை தனது படங்களில் பேசும் பழக்கம் கொண்டிருந்தவர்.
ராமராஜனும் அரசியலில் ஆர்வம் காட்டியவர் தான். பெரும்பாலும் அதனை தனது படங்களில் அதிகமாக காட்டிக்கொண்டதில்லை. படத்தின் இயக்குனர், தயாரிப்பளர் என அனைவரும் தவில் வித்வான் வேஷத்தில் சந்திரனைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்களாம். ராமராஜன் மட்டுமே தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாராம்.
இருவரும் வெவ்வேறு கட்சிகளில் பயணித்து வந்தார்கள். இதனால் சந்திரன் படத்தில் அரசியல் பேசிவிடுவார். அதனால் அவருக்கு பதிலாக வேறு யாரையாவது நடிக்க வைக்க அழுத்தம் கொடுத்தாராம் ராமராஜன்.
இதற்கு பலரும் சம்மதிக்காத நிலையில் ஒரு கட்டத்தில் எஸ்.எஸ்.சந்திரன் “கரகாட்டக்காரன்” படத்தில் நடித்தால் தான் படத்திலிருந்து விலகிக்கொள்வதாகவே சொல்லி விட்டாராம். இதானல் தான் எஸ்.எஸ். சந்திரன் மாற்றப்பட்டு கவுண்டமணி அந்த வேடத்தில் நடிக்க வைக்கப்பட்டாராம்.