Latest News
2 நாட்களில் வீடு திரும்புவார் நடிகர் ரஜினிகாந்த்… மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கை…!
நடிகர் ரஜினிகாந்த் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு நேற்று இரவு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ ராம் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் ரத்த குழாயில் உள்ள அடைப்பு வீக்கம் கண்டறியப்பட்டது. உடனடியாக அதற்கு ஏற்ற சிகிச்சையை டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான குழு விரைந்து செய்தனர். இதைத்தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் ஐசியூ வில் இருப்பதாக கூறப்பட்டது. இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்று தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் மருத்துவமனை சார்பாக ஒரு அறிக்கை வெளியாகி இருக்கின்றது. அதில் ரஜினிகாந்த் தற்போது சீராக உள்ளார். அறுவை சிகிச்சை இல்லாமல் இதயத்தில் கதீட்டர் மூலம் ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மனநிம்மதி அடைந்திருக்கிறார்கள். மேலும் அவரின் ரசிகர்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.