ரஜினிகாந்துக்கு தங்கர்பச்சான் வைக்கும் கோரிக்கை

ரஜினிகாந்துக்கு தங்கர்பச்சான் வைக்கும் கோரிக்கை

காதல் கோட்டை, உன்னுடன் உட்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் தங்கர்பச்சான். பின்பு அழகி, தென்றல், சொல்ல மறந்த கதை, அம்மாவின் கைப்பேசி என சில படங்களை இயக்கினார். இதில் அழகி படம் இவரை உயர்த்தி விட்டது.

சமீபகாலமாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வரும் தங்கர்பச்சான் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

வளர்த்து விட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிகாந்த் அவர்களை வரவேற்கிறேன்! தமிழக அரசியலை வணிகமாக மாற்றிய அரசியல் வாதிகள்,அரசியல் தரகர்கள்,அரசியல் கட்சிகளின் இணையக்கூலிகள் புலம்பி கதறுவார்கள்!அதனை புறந்தள்ளி மக்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துங்கள் என தங்கரபச்சான் கூறியுள்ளார்.