Connect with us

மண்ணை விட்ட மறைந்த மதுரை வீரன்… விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி…

vijayakanth rajinikanth

cinema news

மண்ணை விட்ட மறைந்த மதுரை வீரன்… விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி…

ரஜினிகாந்த், விஜயகாந்த் இந்த இரு காந்தங்களும் இரும்பு நெஞ்சம் கொண்டு  சினிமாவை பிடிக்காதவர்களை கூட தங்களது தங்களது நடிப்பினாலலும், குணத்தினாலும்  ஈர்த்து தன்வசப்படுத்திய காந்தங்கள். இருவரும் தங்களது தனித்துவமான நடிப்பினால் தமிழக ரசிகர்களின் சினிமா மோகத்திற்கு தீனி போட்டுக்கொண்டிருந்தார்கள் தங்களது திறமைகளால்.

‘புரட்சிக்கலைஞர்’, ‘கேப்டன்’ விஜயகாந்த் உடல்நலக் கோளாறு காரணமாக இயற்கை எய்தினார் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில். அவரது இறப்பு இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியாதத்தாகத்தான் இருக்கின்றது நம்மில் பலரால். அவரின் இறுதி ஊர்வலத்தில் நடந்தேறிய காட்சிகள் பங்கேற்றும், பார்த்டும் வந்தவர்களின் கண்களை குளமாக்கியது. நடிகர் விஜயகாந்தாக மட்டுமே அவரை பார்க்காமல் சிறந்த மனிதாபிமானியாகவும் பார்த்துவந்தனர் தமிழக மக்கள் அவரை.

padmabhooshan vijayakanth

padmabhooshan vijayakanth

மறைந்த விஜயகாந்திற்கு இந்தியாவின் உயரிய விருதான “பத்மபூஷன்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அதனை பெற்றுக்கொண்டார். இந்தியத்திரை உலகமே விஜயகாந்தை நினைவில் வைத்து தொடர்ச்சியாக தங்களது மகிழ்ச்சியும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறது.

தமிழ் திரைஉலகின் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் விருது வழங்கப்பட்டதன் பிறகு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் விஜயகாந்த் போல இனி ஒரு நபரை பார்க்கவே முடியாது. தனக்கு மிகவும் பிடித்த நண்பர் அவர் என குறிப்பிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் மதுரையில் பிறந்த மதுரை வீரன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அவர் மறைந்து விட்டதை இன்றும் தன்னால் நம்ப முடியவில்லை எனவும் சொல்லி இருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது அதிகமானோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

More in cinema news

To Top