cinema news
தில்லுக்கு துட்டு…அவரா இவரா?…டாஸ் போட காத்திருக்கும் ரஜினிகாந்த்!…
“ஜெயிலர்” பட வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தினுடைய மார்க்கெட் பழைய நிலையை அடைந்துள்ளது. ஜெயிலருக்கு முன்பு பேர் சொல்லும் அளவிலான ‘ஹிட்டான ‘ படம் என்றால் அது “பேட்ட” மட்டுமே. சுறுசுறுப்பான ரஜினியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அவர்களிம் விருப்பம் போலே காட்டியதாக கருத்து சொல்ல வைத்த படம் அது.
“ஜெயிலர்” படத்தில் ரஜினியினுடைய ஸ்டைலான,அமைதியான நடிப்பு ரசிகர்களை கவர, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா? என நெல்சனை யோசிக்க கைக்கும் அளவிலான மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.
“வேட்டையன்” படத்தில் இப்போது நடித்து வரும் ரஜினி, லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்க போகிறார். அதற்கான வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளோடு இருந்து வருகிறாராம் ரஜினி.
ஒரு வேளை “ஜெயிலர் 2″உருவானாலோ, அல்லது வேறு படமாக இருந்தாலோ, தயாரிப்பு பொறுப்பை யார் கையில் கொடுப்பது? என்ற குழப்பத்தில் இருந்து வருகிறாராம் ரஜினி.
ரஜினியின் சாய்ஸ் இப்போதைக்கு இரண்டு பேர்கள் மட்டும் தானாம். தில் ராஜூ, ஐசரி கணேசன் இவர்கள் இருவரில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பது தெரியாது.
இப்போதைய நிலவரப்படி கோலிவுட் வட்டாரத்தில் படங்கள் தயரிப்பதில் சில குறிப்புஇட்ட நிறுவனகள் மட்டுமே முன்னனியில் இருக்கிறது. அதில் இவர்கள் இருவரும் முக்கிய இடத்தில் உள்ளனர். ரஜினியின் கடைக்கண் பார்வையோ தில்ராஜுவை நோக்கி தான் இருக்கிறதாம்.
அதனால் அவருக்கு முதலில் வாய்ப்பை வழங்கிவிட்டு, அதற்கு அடுத்த படத்தை ஐசரி கணேசனுக்கு வைத்து தயாரிக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருவதாக வலைப்பேச்சு அந்தண்ன் சொல்லியிருக்கிறார்.