Latest News
திருப்பதி லட்டு விவகாரம்… சாரி நோ கமெண்ட் சொன்ன தலைவர் ரஜினி… நைசா எஸ்கேப் ஆயிட்டாரு…!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு சாரி நோ கமெண்ட் என்று சொல்லிவிட்டார் நடிகர் ரஜினி.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்ற செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது ‘வேட்டையன் திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அதிக திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று கூறினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்கள் திருப்பதியில் லட்டு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சாரி நோ கமெண்ட்ஸ் என்று பதில் அளித்தார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் அமிதாபச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர், ரானா ரகுபதி, அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் வேட்டையன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.