cinema news
இது தேறுமா தேவா?…சந்தேகப்பட்ட ரஜினிகாந்த்..சக்கை போடு போட்ட படம்!…
பஸ் கண்டக்டர் சிவாஜி ராவ் கெய்க்வாட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறிய கதை தமிழ் சினிமா நன்றாக அறிந்த ஒன்றே. கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் இன்று இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார்.
‘பஞ்ச்’ வசனங்களுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுப்பவர் இவர். தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை தனது பாடல்கள் மூலமும் தெளிவாக சொல்லிவிடுவார். அதுவும் தனது பட ஓபனிங் சாங்களில் தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை தனது ரசிகர்களுக்கு மாஸாக தெரிவித்து வருகிறார் ரஜினி.
பஞ்ச் வசனங்கள், பாடல்களில் கருத்துக்கள் என எப்படி தனது எண்ணம் திரையில் முழுமையடைய முக்கியத்துவம் கொடுப்பாரோ, அதே போல அவருடைய படத்தின் இசைக்கும் அதிக கவனம் காட்டப்படும் .
பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்துவார் ரஜினிகாந்த். “படையப்பா”, “அருணாச்சலம்” படங்களில் பின்னனி இசை பந்தாவாக அமைந்திருக்கும். “பாட்ஷா” திரைப்படத்தின் இசையமைப்பு முடிந்த பிறகு ரஜினிக்கு அதில் முழு திருப்தி கிடைக்கவில்லையாம். அப்பொழுது அவர் தேவாவை போனில் அழைத்து “பாட்ஷா” படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுமா? , பின்னணி இசை தேருமா தேவா? என கேட்டாராம்.
“அண்ணாமலை” பட இசை போல இது நமக்கு மெகா ஹிட் அடிக்குமா? என சந்தேகத்தையும் தேவாவிடம் எழுப்பியுள்ளார் ரஜினிகாந்த். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், இது பத்து “அண்ணாமலை”க்கு சமம் என சொல்லி இருக்கிறார் தேவா.
அவர் சொன்னது போலவே “பாட்ஷா” திரைப்படத்தின் பின்னணி இசை அந்த படத்தினுடைய மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இன்று வரை வலைதள டெம்லேட்களுக்கும் அந்தப் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டு வருகிறது.