cinema news
என்னா ஸ்டைலு…தலைவர்னா தலைவர் தான்…திரும்பி பார்க்க வைத்த சூப்பர் ஸ்டார்…
“வேட்டையன்” படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது. அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்திருக்கிறார்கள். படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலில் காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “கூலி” படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளது. இதற்கிடையில் “படையப்பா” படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் முயற்சியில் படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்தது.
நடந்து முடிந்த ஐபிஎல் இறுதி போட்டிக்கு சன்-ரைசர்ஸ் அணி தகுதி அடைந்தது கூட ரஜினி தயாநிதி மாறனுக்கு விடுத்த கோரிக்கையினால் தான் என பேச்சு. இந்நிலையில் தனக்கு கிடைத்த இடைவெளியில் துபாய்க்கு பறந்தார் ரஜினி.
இப்படி ரஜினி பற்றிய செய்தகள் தினசரி அவரது ரசிகர்களை சென்றடைந்து கொண்டு தான் இருக்கிறது. துபாயில் வைத்து தான் “படையப்பா” ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சு வார்த்தை கூட நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.
தமிழ் சினிமாவில் என்றுமே தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் இமயமலை அடிவாரத்தில் நிற்கும் போட்டோ வெளியாகியுள்ளது. வெள்ளை நிற வேஷ்டி, அதே நிறத்தில் சட்டை. மார்பை சுற்றி சால்வை. முகத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து சிரித்திருக்கிறார் போட்டோவில் ரஜினி.
இமயமலையில் தியானத்திற்கு செல்வதை பழக்கமாக வைத்திருப்பவர் ரஜினி. அதே போல தனது ஆன்மீக சுற்றுப்பயணத்தை துவங்கிவிட்டாரா ரஜினி? என அவரது ரசிகர்களை நினைக்க வைத்துவிட்டார் இந்த புகைப்படம் வெளியான பிறகு. வயது எத்தனை ஆனால் என்ன ஸ்டைல்னா அது தலைவர் தான் என இந்த படத்தை பார்த்து விட்டு ரஜினியை புகழ்ந்து வருகின்றனர் அவரின் ரசிகர்கள்.