rajini
rajini

ரஜினி சொன்னதை செய்து காட்டிய மாறன்?… கிரிக்கெட் அணி பைனல் வர தலைவர் தான் காரணமா!..

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நிகராக பார்க்கப்படும் உள்ளூர் போட்டி ஐ.பி.எல். கொரனா கோர நேரத்தில் மட்டுமே இந்த தொடர் வெளிநாட்டில் வைத்து நடத்தப்பட்டது. இந்தாண்டு எப்போதும் போல அதே விறுவிறுப்புடன் துவங்கியது போட்டி.

பங்கேற்ற அணிகள்  ஒவ்வொன்றும் தங்களது திறமைகளை காட்டி மல்லுக்கட்டியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தொடரிலிருந்து வெளியேறியது. இறுதிப்போட்டி சென்னையில் வைத்து நாளை நடக்க உள்ளது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம்  மைதானத்தில் வைத்து நாளை மாலை நடைபெற உள்ள இறுதிப்போட்டியை காண ரசிகர்கள் தயாராகி வருகிறனர்.

திரைத்துறைக்கும், அரசியலுக்கும் எப்படி தொடர்பு உள்ளதோஅதே  போல தான் நாளைய இறுதிப்போட்டிக்கும் தமிழ் திரை உலகத்திற்கு நெருங்கிய தொடர்பு இருக்கத்தான் செய்கிறதா? என சிந்திக்க வைத்துள்ளது.அதற்கு காரணமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

kalanithi Maran Kavya Maran
kalanithi Maran Kavya Maran

இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் சன் குழுமம். ரஜினி, கலாநிதி மாறன் முன்னிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பேசும் பொழுது ஐபிஎல் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நல்ல வீரர்களை தேர்ந்தெடுங்கள். போட்டியின் போது  காவ்யா  மாறன் செய்வதை எல்லாம் பார்த்தாலே தனக்கு பி.பி எகிறிவிடுகிறது என சொல்லியிருந்தார்.

ரஜினி சொன்னதால் மாறன் அணியில் சில மாற்றங்களை செய்ததால்  தான் இப்பொழுது அவர்களின் அணி இறுதிப் போட்டி வரை வந்துள்ளது என்ற பேச்சுக்கள் நிலவுகிறது.  அதே போல  கோப்பையை வெல்லும் எனவும்  எதிர்பார்க்கபடுகிறது. “அருணாச்சலம்”  படத்தில் ரஜினி பேசிய வசனமான  ‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்’ என்பதைப்போல ‘ரஜினி சொன்னார், மாறன் முடித்தார்’ என சொல்லி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.