தர்பார் படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

583

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்துக்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் தமிழ் சினிமா உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டை வெற்றி படத்தை அடுத்து ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தை லைக்கா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துவருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தை பிரபல லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காக ரஜினிக்கு ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் தற்போதும் ரஜினி முதலிடத்தில் நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  ஊரடங்கிலும் உடற்பயிற்சி செய்வேன்! சிம்பு ரகளை!