ரஜினிகாந்த் மூன்று தலைமுறைகளாக தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இந்தியத்திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தும் வருபவர்.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஏறுமுகத்தில் மட்டுமே இருந்து கொண்டிருந்த அவரது மார்க்கெட் சில காலங்களுக்கு முன்பு இறங்கு முகத்திற்கு மாறியது.
இவர் போன்ற ஒரு ஃபேன் பேக்கப் கொண்ட நடிகரின் படம் ஒன்று தோல்வியடைந்தாலே விமர்சிக்கப்படும். யாரும் எதிர்பாராத விதமாக இவரது பல படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காமல் போனது.
அவரது படங்கள் அதிகமாக எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே வாங்கித்தந்தது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர்.
“பேட்ட” நல்ல வரவேற்பை பெற, தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வந்தார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கத்தில் வெளியான் “ஜெயிலர்” படமும் வெற்றியடைய, கொண்டாட்டித்தீர்த்தனர் ரஜினி ரசிகர்கள்.
இந்த இரண்டு படங்களும் அவரை மீண்டும் வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றது. ஒரு ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனில் அவர் நான் யானை அல்ல குதிரை, கீழே விழுந்தா உடனே எழுந்திருத்து விடுவேன் என சொல்லியிருந்தார். அப்படிச்சொன்னதை நிருபித்தும் விட்டார், மீண்டும் ஒருமுறை.
“எந்திரன்” படத்தில் ‘சன் பிக்சர்ஸ்’ உடன் முதன்முறையாக இணைந்த அவர், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தனது 171 வது படத்தில் ரஜினியுடன் இணைந்துள்ளார்…
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் வெளிவர உள்ள படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் படத்தினுடைய பெயர் வெளியிடப்பட்டுள்ளது. “”கூலி’ இது தான் ரஜினி 171ன் பெயர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ‘சன் பிக்சர்ஸ்”

“கூலி” பெயரை கேட்டதுமே ஏதோ வித்தியசாத்தை ரஜினியை வைத்து காட்ட தயாராகி விட்டார் லோகேஷ் கனகராஜ் என் நினைக்க தூண்டியுள்ளது. இனி கேட்க வேண்டும் ரஜினி ரசிகர்களை