“பாகுபலி” படத்தின் மூலம் இந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர்கள் ராஜமெளலி, பிரபாஸ். படத்தின் பிரம்மாண்டம், காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் இவை எல்லாம் உலக சினிமாவையே இந்திய திரை உலகின் பக்கம் திரும்பச்செய்தது.
படம் இரண்டு பாகங்களாக வெளியானது.
இரண்டு பாகங்களிலுமே பிரபாஸ் தான் நாயகன். தமன்னா, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், நாசர், ரானா என பலரும் நடித்திருந்தனர். வசூலில் பல படங்களின் சாதனைகளை தகர்த்து எறிந்தது “பாகுபலி”. இயக்குனர் ராஜமெளலி இந்த படத்திற்கு பிறகு வேற லெவலுக்கு போய் விட்டார். பிரபாஸ் கூட அதே போல தான் இந்தியாவின் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார்.

பிரபாஸ் திருமணம் குறித்து பேசிய ராஜமெளலியின் கருத்துக்கள் இப்போது வைரலாகி உள்ளது. பிரபாஸ் மிகப்பெரிய சோம்பேறி, திருமணம் செய்து கொள்வதிலும் தனது சோம்பேறியாக இருக்கிறார்.
ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருக்கும். அதனால் தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என நினைக்கிறேன் என சொல்லியிருக்கிறார்.
“பாகுபலி” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அனுஷ்கா பிரபாஸ் இருவருக்குமிடையே சம்திங் என வழக்கம் போல கிளம்பியது புரளி.
வடிவேலு படத்தில் வரும் காமெடி டயலாகான ‘நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட’ ஸ்டைலில் ராஜமெளலி பிரபாஸை கலாயித்துள்ளார் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். ஒரு பக்கம் பார்த்தால் இன்று பிரபாஸ் அடைந்திருக்கும் உயரத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட கூடியவர் ராஜமெளலியும் கூடவே தான்.











