ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் - அர்த்தம் என்ன தெரியுமா

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் – அர்த்தம் என்ன தெரியுமா?

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்தவர் ராஜமௌலி. அந்த படத்துக்கு பின் அவர் தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து ஆர்.ஆர். ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் என்.டி.ஆருக்கு ஜோடியாக நித்யா மேனனும், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியாபட்டும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்திற்கு ஆர்.ஆர்.ஆர் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதன் அர்த்தம் ரகுபதி ராகவ ராஜாராம் என்பதுதான் என தகவல் கசிந்துள்ளது.