sanjeev-ahalya manasa
sanjeev-ahalya manasa

ராஜா-ராணிக்கு குட்டி ராணி பிறந்துட்டாங்க – மகிழ்ச்சியில் சின்னத்திரை ஜோடி

தொலைக்காட்சி சீரியல் ஜோடிகள் நிஜ வாழ்விலும் ஜோடிகளாக வலம் வருவது என்பது புதிதல்ல.

“ராஜா ராணி” என்ற தனியார் தொலைக்காட்சி சீரியல் மூலம் கார்த்திக்-செம்பா என்ற கதாபாத்திரமாக தமிழ் ரசிகர்களுக்கு சின்னத்திரையில் அறிமுகமாகி நிஜ வாழ்க்கையிலும் சஞ்சீவ் -ஆல்யா மானசா ஜோடிகளாக இணைந்தார்கள். இவர்களின் திருமணத்தை பெற்றோர்கள் ஏற்காதது அனைவருக்கும் தெரிந்ததே. பின்பு மானசா கர்ப்பமாக இருந்ததும், அவரது வளைகாப்பு புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளிவந்தது.

பிறக்கப் போகும் குழந்தையை பற்றிய சுவாரசியமான தகவல்களை சஞ்சீவ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்திருந்தார். ரசிகர்கள் இவர்களுக்கு எப்பொழுது தான் குழந்தை பிறக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தருணத்தில் சஞ்சீவ் புதிய அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி மார்ச் 20 வெள்ளி அன்று ஆல்யா மானசாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B99xSuqnp7w/?utm_source=ig_embed&utm_campaign=loading

இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்துடன் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு கொண்டு வருகின்றனர்.