தயாரிப்பாளர் செய்த சமாதானத்தை அடுத்து காஞ்சனா பாலிவுட் ரீமேக்கை ராகவலா லாரன்ஸே இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து மாபெரும் ஹிட் ஆன திரைப்படம் காஞ்சனா. எனவே, காஞ்சனா 2, காஞ்சனா 3 என மூன்று பாகங்கள் வெளியாகி பல கோடிகளை வசூலித்துள்ளது.
எனவே, பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிக்க அப்படத்தை ராகவே லாரன்ஸே இயக்குவது என முடிவானது. தமிழில் வெளியான காஞ்சனா 2 கதையை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவானது. ஆனால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை அக்ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதனால் கோபமடைந்த லாரன்ஸ், இப்படத்தின் இயக்குனர் எனக்கு தெரியாமல் எப்படி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடலாம். இப்படத்திலிருந்து நான் விலகுகிறேன் என லாரன்ஸ் அறிவித்திருந்தர். எனவே, இப்படத்தை வேறு இயக்குனர் வைத்து இயக்குவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக இப்படத்தையே லாரன்ஸே இயக்குகிறார் என தற்போது செய்திகள் கசிந்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் லாரன்ஸை சமாதானம் செய்துவிட்டதால் இந்த திருப்பம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.