எம்.ஆர்.ராதா விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்திலேயே முற்போக்கு கருத்துக்களை தனது படத்தில் வைத்து அவற்றை பேசி எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல் பாராட்டுக்களையும் பெற்றது. அரசியலிலும் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தவர்.
“ரத்தக்கண்ணீர்” படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இவர் பெயரை என்றும் சொல்ல வைக்கும் திரைப்படம் அது. அந்த படத்தில் அவர் பேசிய வசனங்கள் எல்லாம் கூர்ந்து கவனித்து பார்த்தால் ஏராளமான அர்த்தங்கள் பொருள்படும். மோகன் என்ற கதாபாதிரத்தில் வெளிநாடு சென்று வரும் இளைஞனாக வந்திருப்பார் எம்.ஆர்.ராதா.
இவரின் வாரிசுகளான ராதாரவி, ராதிகா, நிரோஷா இவர்கள் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமானவர்கள். இவர்களில் ராதிகா சினிமாவில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களை தயாரித்தும், நடித்தும் வருகிறார். இவரின் “சித்தி” மெகா சீரியல் ரொம்ப ஃபேமஸ்.
ராதிகா போல் இல்லாமல குறைவான படங்களிலேயே நடித்திருந்தார் நிரோஷா. கார்த்திக்குடன் இவர் நடித்த படங்கள் அதிகம் பேசப்பட்டது. ராம்கியுடன் நடித்த படங்கள் சூப்பர் ஹிட். தந்தையினுடய பாணியிலேயே வில்லனாக அதிக படத்தில் நடித்திருப்பார் ராதாரவி.
தனது தந்தையாரை பற்றி பேசும்பொழுது சிறுவயதிலிருந்தே அப்பாவிடம் நாங்கள் அதிகமாக நெருங்கியது கிடையாது. எங்களை வளர்த்தது எல்லாம் எங்கள் தாய் தான். அதேபோல எங்களுடைய தந்தைக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு உண்டு. அவர்களுக்கெல்லாம் வீடு வாங்கி கொடுத்து வசதிபட வைத்திருந்தார்.
எங்களுக்கு எது வேண்டுமானாலும் முதல் ஆளாக எங்கள் அம்மா தான் செய்வார். மிகுந்த பாசம் கொண்டவர் அவர் என இந்த தகவல்களையெல்லாம் ஒரு பேட்டியின் போது சொல்லியிருந்தார் ராதா ரவி.