Latest News
‘GOAT’ படத்தில் அப்படி நம்பர் பிளேட் வைத்தது ஏன்…? புஸ்ஸி ஆனந்த் கொடுத்த விளக்கம்…!
கோட் திரைப்படத்தில் TN 07 CM 2026 இன்று நம்பர் பிளேட் வைத்தது குறித்த காரணத்தை தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கின்றார்.
மேலும் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியான கோட் திரைப்படம் தமிழக ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய் பயன்படுத்தும் காரில் TN 07 CM 2026 என்று நம்பர் பிளேட் வைக்கப்பட்டிருந்தது. 2026 இல் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சர் ஆவார் என்பதை குறிக்கும் விதமாக இந்த நம்பர் பிளேட் வைக்கப்பட்டிருப்பதாக கேள்வி எழுப்பப்பட்டது. கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை கொடுத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கோட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட நம்பர் பிளேட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர் அதை நோக்கி தானே எங்களின் கட்சி பயணம் இருக்கின்றது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.