தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஒரு சிலருக்கு கொண்டாட்டம் தான் இப்போது நிலவி வரும் சூழ்நிலையால். பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் பெரிதாக வெளிவரவில்லை இந்தாண்டு துவக்கத்திலிருந்தே. அதே நேரத்தில் புது இயக்குனர்கள், கதாநாயகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவை பெரிதாக எடுபடவுமில்லை. இதானால் தங்களது வெற்றி படங்களை அதிக சிரமமின்றி வெளியிட்டு பணம் பார்த்து வருகின்றனர்.
ஆனாலும் தமிழ் திரை உலகம் மீண்டும் சுறுசுறுப்பானது கடந்த சில மாதங்களாக. இப்படி விறுவிறுப்பை தூண்டிய பெருமை விஜயையே சாரும். “கில்லி” பட ரீ-ரிலீஸ் படம் இப்பொது தான் முதன் முறையாக வெளியாவது போல வரவற்பும், அள்ளிக்குவித்த கலக்சனுமே இதற்கு சான்று.
என்ன தான் அஜீத்தின் பிறந்த தினத்தில் அவரது இரண்டு ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்ய்யப்பட்டிருந்தாலும், “கில்லி” வாங்கிக்கொடுத்த பெயரையும், வசூலையும் பெறவில்லை என்பது தான் உண்மை என சொல்லப்படுகிறது. இப்போது ரஜினியும் தனது வெற்றி படம் ஒன்றை மறு வெளியீடு செய்யலாமா? என யோசித்து வருகிறாராம்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “படையப்பா” படத்தை தான் ரீ-ரிலீஸ் செய்யா திட்டமிடப்படுகிறதாம். சமீபத்தில் இது குறித்து பேசியிருந்த படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன் ரஜினியுடன் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது என சொல்லியிருக்கிறார்.
அதே நேரத்தில் “படையப்பா” படத்தை 2கே கிட்ஸ் பார்த்துவிட்டால் ரஜினியின் ஸ்டைலான நடிப்பிற்கும், அதனை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்த விதத்திற்கும் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதோடு “படையாப்பா” மறு வெளியீடு வந்தால் “கில்லி”யின் ரீ-ரிலீஸ் வசூலை சாதனையை எல்லாம் முறியடித்து, வேற லெவெல் கலக்ஷனை கொடுக்கும் என்றுள்ளார். படத்தின் இணை தயாரிப்பாளர் என்பதால் இவர் இப்படி சொல்லியிருந்தாலும் இது விஜய் ரசிகர்களை வம்பிழுப்பது போல இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.