cinema news
கார் கொடுக்கிறதெல்லாம் கவர் பண்ணதுக்குத்தானாம்!…தன்னை நம்பாம இதெல்லாம் எதுக்கு பண்றீங்க..அதிரடி காட்டிய தயாரிப்பாளர்?…
ஒரு காலத்தில் படங்களின் வெற்றி விழா அதாவது சக்சஸ் மீட் எப்பொது நடத்தப்படும் என்றால் படம் ஐம்பது நாட்கள், நூறு நாட்கள் அதையும் தாண்டி ஓடும் போது தான். ஆனால் இப்போதெல்லாம் நான்காவது நாளே நடத்தப்படுகிறது. பாக்ஸ்-ஆபீஸால் வெற்றி என அறிவிக்கப்பட்டிருந்தால் கூட இதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் வசூலில் வாங்கிக்கட்டிய படங்கள் கூட வெற்றி பெற்றதாக சொல்லி அதனை கொண்டாடப்படுவதை என்னவென்று சொல்வது என சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியன்.
அதோடு மட்டும் நிறுத்துகொள்ளாமல், சிலர் கார் பரிசெல்லாம் கொடுத்து வருகிறார்கள். இதை எல்லாம் என்னவென்று சொல்வது என தெரியவில்லை என்றும் அவர் சொலியிருக்கிறார். படத்தில் இணைந்ததற்கு தான் சம்பளம் கொடுத்து விடுகிறார்களே அதற்கு பிறகு எதற்கு இது போன்ற பரிசுகள். இதெல்லாம் கொடுப்பது அன்பினாலா? அல்லது அவர்களை கவர்ந்து தங்கள் சொல்லுக்கு கட்டுப்பட வைப்பதற்காவா? எனவும் கேட்டிருக்கிறார். ஹீரோக்கள் தங்களை வைத்து படம் எடுத்த இயக்குனர்களுக்கு பரிசளித்துள்ளதும் தமிழ் சினிமா கண்டுள்ள காட்சி தான்.
நீண்ட வருடங்களுக்கு முன்னர் “வாலி” படத்தில் நடித்த அஜீத் குமார், அதன் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இதே மாதிரி பரிசளித்திருந்தார். “மகாநடிகன்” படத்தில் சத்யராஜ் திருப்பூர் சுப்ரமணியன் சொன்னது போலவே ஒரு வசனத்தை பேசியிருந்தார். சமீபத்தில் “விக்ரம்” வெற்றியின் கொண்டாடும் விதமாக கமல்ஹாசன் “விக்ரம்” படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கார் ஒன்றினை பரிசாக வழங்கியிருந்தார். முன்பு மாதிரி எல்லாம் இல்லை சினிமா இப்போது பல மாற்றங்களை சந்தித்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.